எந்த திசையில் தலை வைத்து படுத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்!! உடல் நலம் பெறும்!!

0
432
#image_title

எந்த திசையில் தலை வைத்து படுத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்!! உடல் நலம் பெறும்!!

மனிதரின் பாதி வாழ்க்கை துக்கத்தில் தான் கழிகிறது. ஒரு மனிதன் சராசரியாக குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் உங்களிடம் எத்தனை பேரிடம் அவ்வாறு தூங்குவார்கள் என்று கேட்டால் பாதி பேரிடமிருந்து கூட பதில்கள் வராது. ஒரு நாட்கள் சரியாக தூங்கவில்லை என்றாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது. ஆனால் ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லை என்றாலும் எந்த பாதிப்பும் கிடையாது. இரவு தூக்கமானது மனிதனுக்கு மிகவும் முக்கியம். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தூக்கத் என்பது மனிதன் எந்த திசையில் தலை வைத்து படுத்தால் நல்லது என்பதை பற்றி பார்க்கலாம்.

முதலில் எப்படி தூங்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். மல்லாந்து மற்றும் குப்புறப்படுத்தும் தூங்கக் கூடாது. அதற்கு மாறாக வலது கை மேலாகவும், இடது கை கீழாகவும் இருக்கும்படி, கால்களை நீட்டி இடது புறமாக ஒரு கலைத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூச்சு சுவாசம் சூரிய கலையில் ஓடும். இதனால் உடலுக்கு தேவையான வெப்ப காற்று அதிகரிப்பதோடு உண்ட உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகும். அதேபோன்று இதயத்தை தேவையான பிராணவாயு சீராக கிடைக்கும். இதனால் ஆயுள் நீடிக்கும். அதற்கு மாறாக வலது புறமாக ஒரு கழித்து படுத்தால் ஜீரண கோளாறு ஏற்படும். இதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளும் அடிக்கடி ஏற்படும்.

இப்பொழுது எந்த திசையில் படித்தால் நன்மை உண்டாகும் என்பதை பற்றி பார்க்கலாம்:

கிழக்கு திசை-பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் சிறுவர் சிறுமிகளும் எந்த திசையில் தலை வைத்து தூங்குவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். இந்த திசையில் குழந்தைகள் தூங்கினால் அவர்களின் நினைவாற்றல் பெருகும். மூளைத்திறன் அதிகரிக்கும். இத்திசையில் தூங்குவதன் மூலம் உடலில் உள்ள ஆரோக்கிய குறைபாடுகள் எளிதில் சரி செய்யப்படும். மேலும் தூக்கத்தில் மூளை நரம்புகளுக்கு ஓய்வுகள் கிடைக்கும்.

தெற்கு திசை-தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசையில் கால் வைத்து தூங்கினால் சிறப்பான மனநிலையை அடைவீர்கள். இத்திசையில் நம் தலை வைத்து தூங்கும் பொழுது மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். நம் உடலுக்கு சுறுசுறுப்பையும் ஆற்றலையும் தரும். இதனால் நாம் செய்யும் வேலைகளில் ஈடுபாடுடன் செயல்படுவோம். வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வதற்கும் நம் ஆயுளை நீடிக்கவும் இத்திசை சரியானதாகும். இவ்வாறு செய்வது உங்களை தேடி செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும். நீங்கள் மன இரக்கத்திலிருந்து விரைவில் வெளியேறுவீர்கள்.

மேற்கு திசை-மேற்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது. திசையில் தூங்குவதால் விரைவில் செல்வந்தராக மாறுவீர்கள். உங்கள் ஜாதகத்தின் படி உங்கள் அதிர்ஷ்டத்தை விரைவில் இழுத்து வந்து சேர்க்கும் திசையாக அமையும். இதனை பின்பற்றுவையில் உங்கள் வாழ்க்கை தரம் உயர்வதை காண்பீர்கள். எந்த எதிர்மறை சக்தியும் உங்களை நெருங்காது. மேற்கு திசை என்பது வெற்றியைத் தரும் திசை.

வடக்கு திசை-எத்திசையில் யாரும் தலைவைத்து தூங்க கூடாத திசை. இந்த திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. இறந்தவர்களை வடக்கு திசை இருந்தால் தலை வைத்து படுக்க வைப்பார்கள். இறந்து போன ஆத்மாக்கள் வடக்கு திசையை நோக்கி செல்லும் என்பதால் அவ்வாறு தூங்கும்பொழுது கெட்ட கனவுகள் அதிகம் வரும். இதனால் தூக்கம் கெடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வடக்கு திசையில் தலை வைத்து தெற்கத்திசையில் கால்களை நீக்குபவர்களுக்கு அதிக உடல் நலப் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் பெருமளவிற்கு பாதிப்பை உண்டாக்கும். அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும் என்றால் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் நேர் எதிர் மின்னோட்டம் இருக்கும். இதனால் பூமியில் உள்ள காலக்கோடுகள் உங்கள் மூளைக்கு பிரச்சனைகளை கொடுக்கும்.

 

author avatar
Selvarani