நமது உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.குறிப்பாக உலர் பழங்கள் மற்றும் உலர் நட்ஸை சாப்பிடுவதால் உடலில் பல வியாதிகள் குணமாகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
முந்திரி,பாஸ்தா,பூசணி,பாதாம்,வால்நட் என்று உலர் நட்ஸில் பல வகைகள் இருக்கின்றது.இதில் பாதாம் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய நட்ஸ்.தினமும் பாதாம் பருப்பு சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.உங்களில் பலருக்கு பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடும் பழக்கம் இருக்கும்.
தினமும் ஊறவைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால் நினைவற்றால் அதிகமாகும்.முடி உதிர்தல்,சருமப் பிரச்சனை,உயர் இரத்த அலாயுதம்,இரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.முந்தின நாள் இரவு பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அதை சாப்பிடும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் பாதாமை எவ்வளவு நேரம் ஊறவைத்து சாப்பிட என்பது பற்றி பலருக்கும் தெரிவதில்லை.பாதாம் பருப்பு அதிகபட்சம் 12 மணி நேரம் வரை ஊறவைத்து சாப்பிடலாம்.இப்படி ஊறவைத்த பாதாமை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
பாதாம் பருப்பை எப்படி ஊறவைக்க வேண்டும்?
கிண்ணத்தில் பாதாம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு ஊற விடவும்.8 முதல் 12 மணி நேரம் கழித்து ஊறவைத்த பாதாமை வேறொரு கிண்ணத்திற்கு குளிர்ந்த நீர் ஊற்றி கழுவவும்.பிறகு அதை சிறிது நேரம் உலரவைக்க வேண்டும்.பிறகு பாதாம் பருப்பு தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும்.இந்த முறையில் பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு செரிமான அமைப்பு மேம்படும்.