வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது.ஆனால் அதற்கு நாம் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கம் மற்றும் நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் மட்டுமே இளமை தோற்றத்துடன் இருக்க முடியும்.தினசரி தேன் சாப்பிட்டு வந்தால் இளமை அதிகரிக்கும்.இதனுடன் மிளகு,நெல்லி,ஆவாரம் பூ போன்றவற்றை கலந்து சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி
2)தூயத் தேன் – 50 மில்லி
பயன்படுத்தும் முறை:-
ஒரு கண்ணாடி பாட்டிலில் தூயத் தேன் 50 மில்லி அளவு ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி கரு மிளகு போட்டு ஊற வையுங்கள்.
இரண்டு நாட்களுக்கு ஊறவைக்க வேண்டும்.பிறகு இந்த மிளகை காலை நேரத்தில் இரண்டு என்ற எண்ணிக்கையில் எடுத்து சாப்பிட்டு வந்தால் இளமை தோற்றம் மாறாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:-
இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை கண்ணாடி பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு ஊறிய பிறகு சாப்பிட வேண்டும்.
இப்படி தினமும் தேனில் பெரிய நெல்லிக்காய் போட்டு ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இளமை பொலிவு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேன் – 50 மில்லி
2)ஆவாரம் பூ – இரண்டு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:-
கண்ணாடி கிண்ணத்தில் 50 மில்லி தேன் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து உலர்ந்த ஆவாரம் பூ இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
பிறகு இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் இளமை தோற்றத்துடன் இருப்பீர்கள்.