இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..

Photo of author

By Parthipan K

இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..

Parthipan K

இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..

 

 

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பாசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரி வளாகத்தில் சுமார் மூன்று மெஸ் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மெஸ்ஸிலுள்ள சமையலறை ஒன்றில் தொழிலாளர்கள் சிலர் அங்கு சோப்பு போட்டு டான்ஸ் ஆடி கொண்டும் குளித்து வந்துள்ளனர். இதனைப் பார்த்த அங்கிருந்த மாணவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ வைரலாகி மாணவர் மற்றும் பெற்றோர்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தரமான உணவு வழங்கப்படவில்லை எனவும் மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சமையலறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் குளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.