வாழைப்பூவின் மகத்துவம்! இதில் இத்தனை பயன்களா!

0
94

வாழைப்பூவின் மகத்துவம்! இதில் இத்தனை பயன்களா!

வாழை மரத்தில் அனைத்துமே பயன்படுகிறது அதில் வாழைக்காய் ,வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளது.

வாழைப்பூவின் மருத்துவப் பயன்கள்:

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.மேலும் இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள். வாழைப்பூ இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

மேலும் இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது.

மேலும் இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரிமன்மையின்மை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுகிறது.

மேலும் இவ்வாறு ஏற்படும் புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.

மேலும் மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு: பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மற்றும் மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் தீரும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

 

 

author avatar
Parthipan K