லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!!

Photo of author

By CineDesk

லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!!

CineDesk

If you take a bribe, that's it!! Electricity Board warns employees!!

லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!!

அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டுதான் எந்த ஒரு வேலையும் செய்கிறார்கள். ஒரு சிறிய கையெழுத்து கூட பணம் வாங்காமல் போடப் படுவதில்லை. மக்களும் அவர்களுடைய வேலைக்காகவும், விரைவாக வேலை நடக்கவும் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர். இதில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் ஒரு சில விதி விலக்கான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

லஞ்சம் பெறுவது என்பது அனைத்து துறைகளிலுமே இருந்து கொண்டுதான் உள்ளது.  இந்நிலையில் தற்போது மின் சேவை இணைப்பு பெற அதிகாரிகளோ அல்லது ஊழியர்களோ லஞ்சம் பெற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது.

அதாவது மின் சேவை இணைப்புகள் வழங்குவதற்கு அதிகாரிகளும், ஊழியர்களும் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் இது போன்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று தலைமை பொறியாளர்களுக்கும், கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகளை விசாரிக்க பொறுப்பை விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு வழங்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்கள் ஆதாரங்களுடன் பெறப்பட்டால் சம்பந்த பட்டவர்களின் மீது 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப் பட்டுள்ளது.