ஒப்புக்கு சப்பானாக இருக்கும் பொம்மை முதல்வர்.. உண்மையில் திமுக தலைவர் இவர்கள் தான் – அதிமுக மாஜி அமைச்சர் கண்டனம்!!

ஒப்புக்கு சப்பானாக இருக்கும் பொம்மை முதல்வர்.. உண்மையில் திமுக தலைவர் இவர்கள் தான் – அதிமுக மாஜி அமைச்சர் கண்டனம்!!

அதிமுக மாநிலங்களவை  உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் நேற்று விழுப்புரத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவி சண்முகம், தற்பொழுது மதுரங்கத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குறித்தும், தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, மது என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

இதற்கு அனைத்திற்கும் காரணம் திமுக தான் எனக் கூறி அவர் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தின் உண்டாகும் அனைத்து வகையான சட்ட ஒழுங்கற்ற பிரச்சனைகளுக்கும் முதல்வர் மட்டுமே காரணம் எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்து ஊரைவிட்டு ஓட வேண்டும் என்றும் கூறினார்.

மேற்கொண்டு பேசிய அவர், அதேபோல அதிமுக ஆட்சியின் போது கள்ள சாராயம் என்ற பெயருக்கு இடமில்லாமல் இருந்த நிலையில் தற்பொழுது அமைச்சர்கள் முன்னிலையில் போலீசாரின் ஆதரவோடு கள்ளச்சாராயம் காய்ச்சும் நிலை வந்துவிட்டது. அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த மதுரங்க கள்ளச்சாராய உயிரிழப்பு.

இவ்வாறு கள்ளச்சாராயம் காய்ச்சுவது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக அமைச்சர்களை தான் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு காரணம் என்பதை வெளிக்காட்டும் விதமாக அமைச்சர் செஞ்சி மஸ்தானின் புகைப்படம் வைரலானது அனைவரும் அறிந்ததே.

அதுமட்டுமின்றி செஞ்சி மஸ்தான் குடும்பத்தினர் திமுகவில் பல பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் நிலையில் அவர்களும் தவறானவர்களுடன் பழக்கத்தில் உள்ளனர் என்று மேல் இடத்திற்கு புகார் சென்றதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் அவரது தம்பி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை வைத்தும் மாஜி சிவி சண்முகம் கூறியதாவது, செஞ்சி மஸ்தான் அவர் பகுதியில் உள்ள மக்களின் குறைகளை நீக்காமல் மரூர் ராஜாவுடன் தொடர்பு கொண்டு சாராயத்தை விற்று வருகிறார்.அதுமட்டுமல்லாமல்  தமிழக டிஜிபி சைலேந்திரபாபு முதல்வர் வீட்டிற்கு வேலை செய்யும் ஒரு வேலையாக தான் உள்ளார்.

காவல்துறையை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது கூட தெரியாமல் தற்போதைய தமிழ்நாட்டின் பொம்மை முதலமைச்சர் என்ற பெயரை ஸ்டாலின் பெற்றுள்ளார். காவல்துறையும் சட்ட ரீதியான வேலைகளை பார்க்காமல் முதல்வர் குடும்பத்திற்கு சலாம் போட்டு வேலைகளை செய்து வருகிறது.

அதேபோல கலப்படம் ஆன மதுபானங்கள் தற்பொழுது வரை விற்ப்பனைக்கு வந்த வண்ணமாக தான் உள்ளது இதில் நஷ்டம் அடையும் வருமானம் அனைத்தும் அணில் பாலாஜிக்கு தான் என்று கூறினார். இவர் அந்தத் தொகையை பிரித்து ஸ்டாலின் குடும்பத்திற்கு கணக்கு காட்டுகிறார். விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பார்கள்  பெரும்பாலும் உரிமம் இன்றி தான் இயங்குகிறது. இது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால் ஒருவர் கூட தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் வரும் வருமானம் எல்லாம் எங்கே போகிறது. இதில் மட்டுமே இந்த விடியா ஆட்சி பத்தாயிரம் கோடி ரூபாய் வரை சம்பாதித்து விடுகிறது. இதனால்தான் திமுகவின் குடும்ப உறுப்பினர்கள் பின்னணியில் அத்தனை கோடி சொத்து மதிப்புகள் உள்ளது.

அதேபோல அவருடைய அமைச்சர் பி டி ஆரின் ஆடியோ உண்மை இல்லை என்றால் ஏன் அவரை பதவி மாற்றம் செய்ய வேண்டும்? அது மட்டுமின்றி  தற்போது வரை ஏன் அவர் மீது எந்த ஒரு வழக்கும் போடவில்லை என்று கேள்வி எழுப்பினார்.மேலும் எடப்பாடி அவர்களே இனி நீங்கள் ஒருவேளை கூட நிம்மதியாக தூங்க முடியாது என தென்னரசு கூறுகிறார். ஆனால் இதனை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும், அவரது தலைவரே அவர்களது அமைச்சர்களை பார்த்து நிம்மதியாக தூங்க விடுங்கள் என்று கூறியது நினைவில் இருக்கட்டும் என்று தெரிவித்தார்.

தற்பொழுது வரை திமுகவின் தலைவர் யார் என்பதில் குழப்பம் நீடித்து தான் வருகிறது ஓர் பக்கம் உதயநிதி என்றும், மறுபக்கம் துர்கா ஸ்டாலின் என்றும் மாற்றி மாற்றி கூறி வருகின்றனர். ஏனென்றால் ஒரு பொது நிகழ்ச்சியில் இவருடைய அமைச்சரே முதல்வருக்கு அரசியல் ஆலோசனை சொல்வது அன்னியார் தான் என கூறியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. தற்பொழுது இருக்கும் ஆட்சியானது மக்களின் பணத்தை சுரண்டும் கொள்ளை ஆட்சியாக தான் உள்ளது என சரமாரியாக தனது கண்டனங்களை சிவி சண்முகம் அவர்கள் எடுத்துரைத்தார்.