முருங்கை கீரை எடுத்துக்கொண்டால்.. மருத்துவ செலவுகள் மிச்சம்!!

Photo of author

By Jeevitha

முருங்கை கீரை இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று. மேலும் இந்த கீரை ஆஸ்துமா, மார்பு சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை ரசம் அல்லது முருங்கை சூப் மிக சிறந்த பலனை தரும். முருங்கை இலை சாறு எலும்புகளை வலுப்படுத்த மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கீரையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் வலு பெற்று இளமையாக இருப்பது போன்று தோற்றமளிக்கும்.

அது மட்டும் அல்லாமல் உடல் பருமனாகாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த கீரை நாம் உணவில் எடுத்துக் கொள்வது சிறந்தது. ஏனென்றல் கொழுப்பின் அளவை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் முருங்கை கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் மல சிக்கலை தடுத்து வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு இது நிவாரணம் தருகிறது. முருங்கை கீரை ஆரஞ்சு பழத்தை விட ஏழு மடங்கு வைட்டமின் சி ஊட்டச்சத்து கொண்டது.

அது மட்டும் அல்லாமல் ரத்த சக்கரையை இது கட்டுப்படுத்துகிறது. மேலும் தியாமின், ரிபோபிளேவின், நியாசின், மற்றும் பி12 போன்ற வைட்டமின்கள் முருங்கை காயில் உள்ளன. இது இரைப்பை குடல் அமைப்பின் நல வாழ்வை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இந்த முருங்கை கீரை ரத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. இது போன்ற பல நோய்களுக்கு இந்த முருங்கை கீரை பயனுள்ளதாக இருக்கிறது என கூறப்படுகிறது.