பைல்ஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு தான் அதனால் வரும் வலி,பாதிப்பு தெரியும்.இந்த பைல்ஸ் கட்டிகள் ஆசனவாய் பகுதியில் வருகிறது.இதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுகின்றனர்.ஆனால் பைல்ஸ் அதாவது மூல நோய் பாதிப்பை குணமாக்கி கொள்ள அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.
துத்தி இலை பைல்ஸ் பாதிப்பிற்கு அருமருந்தாக திகழ்கிறது.துத்தி கீரை வயல் வெளிகளில்,புதர்களில் வளர்ந்து கிடக்கும்.இந்த கீரையை பயன்படுத்தி மூல நோய் பாதிப்பை குணப்படுத்திக் கொள்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.
பைல்ஸ் பாதிப்பை குணமாக்கும் துத்தி கீரை:
தேவையான பொருட்கள்:-
1)துத்தி கீரை – கால் கப்
2)தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
துத்தி கீரை கால் கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த கீரையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்குங்கள்.அதன் பிறகு துத்தி கீரையை அதில் போட்டு மிதமான தீயில் வதக்குங்கள்.
துத்தி கீரை நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.இதை ஆறவைத்து ஆசனவாய் பகுதியில் வைத்து கட்ட வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.துத்தி இலை மூல நோய் புண்கள் மற்றும் எரிச்சலை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கின்றது.
மூல நோய்க்கு துத்தி கீரை ஜூஸ்:
தரமான துத்தி இலைகளை தண்ணீரில் போட்டு அலசி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகி வந்தால் மூல நோய் புண்கள் ஆறும்.இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
மூல நோய்க்கு துத்தி இலை மோர்:
ஒரு கிளாஸ் பசு மோரில் துத்தி இலை சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருகி வந்தால் மூல நோய் பிரச்சனை சரியாகும்.
மூல நோய்க்கு துத்தி கீரை பொடி:
ஒரு கைப்பிடி அளவு துத்தி கீரை எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து பொடித்து தண்ணீரில் கலந்து பருகி வர மூல நோய் குணமாகும்.
அதேபோல் துத்தி கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.