10 பீன்ஸை இப்படி பயன்படுத்தினால்.. சிறுநீரகத்தில் உள்ள கற்கள் ஐஸ்கட்டி போல் கரைந்துவிடும்!!
அதிக உப்பு,புரதம் நிறைந்த உணவுகள் சிறுநீரகத்தில் கற்களை உண்டாக்கி விடும்.அது மட்டுமின்றி ஹார்மோன் பிரச்சனை,சிறுநீரக தொற்று,பரம்பரை தன்மை போன்ற காரணங்களால் சிறுநீரக கல் உருவாகிறது.இதை ஆரம்ப நிலையில் சரி செய்து கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள்:-
1)பீன்ஸ்
2)தண்ணீர்
செய்முறை:-
முதலில் 10 பீன்ஸை கழுவி சுத்தம் செய்யவும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போடவும்.அதன் பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் ஒரே மாதத்தில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து விடும்.
தேவையான பொருட்கள்:-
1)வாழைத்தண்டு
2)தண்ணீர்
செய்முறை:-
ஒரு கப் அளவு பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.இந்த சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக கல் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சம் பழம்
2)சர்க்கரை
3)தண்ணீர்
செய்முறை:-
ஒரு கிளாஸ் நீரில் பாதி எலுமிச்சையின் சாற்றை பிழிந்து விடவும்.அதன் பின்னர் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சிறுநீரக கல் பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வெண்பூசணி
2)தண்ணீர்
செய்முறை:-
ஒரு கப் வெள்ளை பூசணி துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக கல் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)பார்லி அரிசி
2)தண்ணீர்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பார்லி அரிசி சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் இந்த பார்லி நீரை பருகி வந்தால் சிறுநீரக கல் பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.