ஒரு பேரிச்சம் பழத்தை இப்படி பயன்படுத்தினால் மூட்டு வலி இடுப்பு வலி போயே போய்விடும்!!

Photo of author

By Divya

ஒரு பேரிச்சம் பழத்தை இப்படி பயன்படுத்தினால் மூட்டு வலி இடுப்பு வலி போயே போய்விடும்!!

Divya

Updated on:

If you use a date like this, joint pain and hip pain will go away!!

ஒரு பேரிச்சம் பழத்தை இப்படி பயன்படுத்தினால் மூட்டு வலி இடுப்பு வலி போயே போய்விடும்!!

ஆண்,பெண் பாகுபாடின்றி அனைவரும் மூட்டு,முதுகு,முழங்கால் வலிகளை அனுபவித்து வருகின்றனர்.60 வயதிற்கு பின்னர் சந்திக்க வேண்டிய இந்த பாதிப்புகளை ஆரோக்கியமற்ற உணவுமுறை பழத்தால் 30 வயதியிலேயே சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.ஒரு இடத்தில் 5 நிமிடங்கள் கூட நிற்க கூட முடியாமல் கால் வலிக்கிறது என்று திணறி வரும் நபர்கள் இங்கு ஏராளம்.

இதுபோன்ற பிரச்சனைகளை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

*உலர் பேரிச்சம் பழம்
*தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் விதை நீக்கப்பட்ட 5 பேரிச்சம் பழத்தை போடவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

மறுநாள் காலையில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் நீரை அருந்தவும்.இவ்வாறு தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால் மூட்டு வலி,முழங்கால் வலி,இடுப்பு வலி அனைத்தும் பறந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

*உலர்ந்த பேரிச்சம் பழம்
*பால்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றவும்.2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.பிறகு அதில் சிறிது வெள்ளை கற்கண்டு போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி 2 அல்லது 3 விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழத்தை போட்டு கலக்கி குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் மூட்டு வலி,கை கால் வலி,இடுப்பு வலி,முதுகு வலி அனைத்தும் முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

*கடுகு எண்ணெய்
*திப்பிலி
*சுக்கு
*பூண்டு
*பிரியாணி இலை

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 100 மில்லி அளவு கடுகு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 3 திப்பிலி,ஒரு துண்டு சுக்கு,4 பல் பூண்டு மற்றும் 2 பிரியாணி இலையை போட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.

2 நிமிடங்களுக்கு எண்ணையை நன்கு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.இந்த எண்ணெயை உடம்பில் வலி உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் அவை முழுமையாக குணமாகும்.