இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!..

0
166

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!..

இந்திய முழுவதும் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் எளிமையான முறையில் பணம் எடுக்க வங்கிகள் பல ஏடிஎம் இயந்திரங்கள் அந்தந்த பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டில் எடுத்துக் கொள்கின்றனர்.தற்போது ஏடிஎம் பயன்படுத்தும் பரிவர்த்தனை அளவு அதிகரித்துள்ளது.அதன் படி ஏடிஎம் கார்டை மாதம் ஐந்து முறை பயன்படுத்தலாம் எனவும் மூன்று முறை பிற வங்கி ஏடிஎம் களில் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என நிர்ணயம் செய்திருந்தன.இந்நிலையில்

அதற்கு மேல் பணம் எடுக்கும் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிகப்படுகிறது.மேலும் அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்திற்கு பிறகு நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ரூ.20 கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி ஒரு மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் தற்போது வசூலிக்கப்படும் ரூ. 20 லிருந்து ரூ.21 ஆக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.இந்த திடீர் மாற்றத்தை வங்கி மேலாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்தனர்.

Previous articleஎன்னையா கடிச்ச? தன்னை கடித்த பாம்பை கடித்துத் துப்பிய 2 வயது சிறுமி!
Next articleபுதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?