ATM கார்டுகளை 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால் 10 லட்சம் வரை பணம் கிடைக்கும்!!

Photo of author

By Gayathri

நீங்கள் ஏடிஎம் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவர்களாக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் உங்களுடைய ஏடிஎம் கார்டுகளை 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், இலவச காப்பீட்டு உதவிக்கு நீங்கள் தகுதி உடையவராக மாறிவிடுவீர்கள்.

அனைத்து வங்கிகளிலும் தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கி வருகின்றனர். நம் அன்றாட தேவையில்லை ஏடிஎம் கார்டும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த டெபிட் கார்டினை நாம் பெரும்பாலும் நிறைய இடங்களில் பயன்படுத்துகிறோம். இப்பொழுதெல்லாம் பணம் கையில் இருப்பதைவிட ஏடிஎம் கையில் இருப்பது அத்தியாவசியம் என்ற நிலைக்கு கூட சிலர் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏடிஎம் கார்டினை தொடர்ந்து பயன்படுத்துவதால் 10 லட்சம் வரையிலான விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெரும்பாலும் யாரும் தெரிந்து கொள்வதில்லை. அதற்கான காரணம் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு இதனை யாரும் தெரியப்படுத்துவதில்லை என்பது தான்.

அட்டையின் வகையைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை மாறுபடும். உதாரணமாக, கிளாசிக் கார்டு ரூ. 1 லட்சம், பிளாட்டினம் கார்டு ரூ. 2 லட்சம், ஸ்டாண்டர்ட் மாஸ்டர் கார்டு ரூ.50,000 மற்றும் பிளாட்டினம் மாஸ்டர்கார்டு ரூ.5 லட்சம் வழங்குகிறது. விசா கார்டு வைத்திருப்பவர்கள் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை கவரேஜ் பெறலாம் மற்றும் ரூபே கார்டு வைத்திருப்பவர்கள் ரூ.2 லட்சம் வரை க்ளைம் செய்யலாம்.

விபத்தில் கை, கால் இழப்பு ஏற்பட்டால் ரூ.50,000 பெறலாம். இரண்டு கைகால்களும் இழந்தாலோ அல்லது கார்டுதாரர் இறந்துவிட்டாலோ, கார்டின் வகையைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் முதல் ரூ5 லட்சம் வரை இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் எப்ஐஆர் நகல்கள், சிகிச்சைப் பதிவுகள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றுகள் போன்ற தொடர்புடைய ஆவணங்களை வங்கிக் கிளையில் சமர்ப்பித்து காப்பீட்டுக் கோரிக்கைக்கு விண்ணப்பங்களை கொடுத்து காப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.