அதிக குளிர்ச்சி நிறைந்த உணவுகள் மற்றும் சூடான உணவுகளை சாப்பிடுவதால் தொண்டை அடைப்பான் நோய் வருகிறது.பெரும்பாலும் குழந்தைகளுக்கே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இந்த தொண்டை அடைப்பான் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ளத் தவறினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.தொண்டை அடைப்பான் பாதிப்பிற்காக பலமுறை அறுவை சிகிச்சை செய்தால் குரல் வலையில் அதிக பாதிப்பு ஏற்படக் கூடும்.எனவே இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.
தொண்டை அடைப்பான் நோயின் அறிகுறிகள்:
*தொண்டை வலி
*பசியின்மை
*உடல் எடை கூடுதல்
*மூக்கில் இருந்து நீர் வடிதல்
தீர்வு 01:
மிளகு
தேன்
1.முதலில் பத்து கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து பொடித்துக் கொள்ளுங்கள்.
2.பிறகு இந்த மிளகுத் தூளை ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளுங்கள்.
3.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி தேனை மிளகுத் தூளில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்து சாப்பிட்டால் தொண்டை அடைப்பான் குணமாகும்.
4.சிறியவர்களாக இருந்தால் 3 மிளகு எடுத்துக் கொள்ளுங்கள்.பெரியவர்களாக இருந்தால் 10 மிளகு எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்து வந்தால் தொண்டை அடைப்பான் குணமாகும்.
தீர்வு 02:
இஞ்சி
தேன்
1.முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
2.பிறகு இதை மிக்ஸி ஜார் அல்லது உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
3.இந்த இஞ்சி சாறை கிண்ணத்தில் ஊற்றி சிறிதளவு தேன் கலந்து காலை மற்றும் மாலை என இருவேளை சாப்பிட வேண்டும்.
4.தொண்டை அடைப்பான் பாதிப்பு இருப்பவர்களுக்கு இஞ்சி சிறந்த தீர்வாகும்.