கற்பூரத்தை இப்படி வீட்டில் பயன்படுத்தினால் பண வரவு எனத் தொடங்கி அனைத்து செல்வ கடாட்சம் உண்டாகும்!!

Photo of author

By Rupa

நம் வீட்டு பூஜைகளில் பயன்படும் முக்கிய பொருள் கற்பூரம் அதாவது சூடம்.வெள்ளை நிறத்தில் நறுமணம் நிறைந்த கட்டிகளாக கடைகளில் விற்கப்படுகிறது.

கற்பூரம் இல்லாமல் எந்த ஒரு பூஜையும் முழுமையடையாது.கற்பூரம் ஆனது கற்பூர மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இது நேர்மறை ஆற்றல் நிறைந்த ஒரு பொருளாக திகழ்கிறது.

வீட்டு பூஜை அறையில் கற்பூரத்தை ஏற்றி வைப்பதால் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் பல மடங்கு அதிகரிக்கும்.இந்துக்கள் வீட்டில் நடக்கும் அனைத்து சடங்குகளிலும் கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.தினமும் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

வாஸ்து தோஷம் நீங்க வீட்டில் கற்பூரம் ஏற்றி வழிபடலாம்.நீங்கள் புதிதாக ஒரு வீட்டிற்கு குடி பெயர்கிறீர்கள் என்றால் முதலில் அந்த வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை விரட்ட கற்பூரத்தை ஏற்றி வழிபடுங்கள்.

வீட்டு பூஜை அறையில் ரோஜா இதழ் மீது கற்பூரத்தை வைத்து எரித்து சாம்பலாக்கி கொள்ளவும்.பணம் வைத்துள்ள இடத்தில் இந்த சாம்பலை மூட்டையாக கட்டி வைத்தால் அதன் வரவு அதிகரிக்கும்.

இந்த கற்பூரத்தில் ஆன்டி பயாடிக் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.கற்பூரத்தை தேங்காய் எண்ணையில் சூடாக்கி மார்பில் தேய்த்தால் சளி பாதிப்பு குறைந்துவிடும்.அதேபோல் கற்பூரத்தை வைத்து தயாரிக்கப்படும் தைலத்தை நெற்றிக்கு தடவினால் தலைவலி குணமாகும்.அதேபோல் சருமம் சார்ந்த பாதிப்புகளை குணப்படுத்த கற்பூரம் பயன்படுகிறது.