சியா விதைகளை சரியான முறையில் உபயோகித்தால்.. சர்க்கரை அளவு கடகடன்னு குறைஞ்சிடும்!!

Photo of author

By Divya

நம் தினசரி உணவில் சியா விதைகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.சியா விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,ஆக்ஸிஜனேற்றம்,நார்ச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.

சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சியா விதையை தண்ணீரில் ஊறவைத்த அல்லது பாலில் கலந்தோ சாப்பிடுவதால் சுகர் லெவல் சீராக இருக்கும்.

ஊட்டச்சத்து நிறைந்த சியா விதை உடல் எடையை குறைப்பிற்கு உதவுகிறது.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சியா பால் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

*சியா விதை – ஒரு ஸ்பூன்
*பால் – ஒரு கிளாஸ்

உபயோகிக்கும் முறை:

ஒரு ஸ்பூன் சியா விதையை கிண்ணத்தில் கொட்டி சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவிட வேண்டும்.

சியா விதை நன்கு ஊறி வந்த பிறகு பாலில் கலந்து குடிக்க வேண்டும்.இதற்கு முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஊறவைத்த சியா விதைகளை போட்டு கலந்துவிட்டு பருகினால் இரத்த சர்க்கரை அளவு சீராகும்.

சியா விதை அதிக நார்ச்சத்து நிறைந்த பொருளாகும்.இதை அதிகளவு பயன்படுத்தினால் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு பாதிப்பை உண்டாக்கிவிடும்.ஆகவே சியா விதைகளை குறைவான அளவே உபயோகிக்க பழகுங்கள்.கடுமையான செரிமானப் பாதிப்பு இருப்பவர்கள் சியா விதைகளை தவிர்ப்பது நல்லது.