பப்பாளி விதையை இப்படி பயன்படுத்தினால்.. சிறுநீரக கற்கள் முழுமையாக வெளியேறிவிடும்!!

0
217
If you use papaya seed like this.. kidney stones will be removed completely!!
If you use papaya seed like this.. kidney stones will be removed completely!!

 

அதிக சுவை மற்றும் ஊட்டச்சத்து மிக்க பழக்கமாக பப்பாளி இருக்கின்றது.இப்பழம் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கின்றது.சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை சந்தித்து வருபவர்களுக்கு பப்பாளி சிறந்த மருந்தாக உள்ளது.பப்பாளி பழம் மட்டும்மல்ல அதன் விதையிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.

பப்பாளி விதையில் இருக்கின்ற சத்துக்கள்:

*பாஸ்பரஸ்
*வைட்டமின்கள்
*துத்தநாகம்
*கால்சியம்
*மெக்னீசியம்
*புரதம்
*கொழுப்பு
*தாதுக்கள்

பப்பாளி விதையில் இருக்கின்ற கார்பைன் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பப்பாளி விதை பொடியில் தேநீர் செய்து குடித்து வரலாம்.

இந்த பப்பாளி விதை சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது.இன்று பலர் சிறுநீரக கல் பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர்.உடலுக்கு போதிய தண்ணீர் இல்லாமை,உடல் பருமன்,அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை உணவு எடுத்துக் கொள்ளுதல்,கால்சியம் சத்து குறைபாடு,நீரிழிவு நோய் உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது.இந்த சிறுநீரக கற்களை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பப்பாளி விதையை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பப்பாளி விதை
2)தண்ணீர்
3)எலுமிச்சை சாறு
4)தேன்

செய்முறை:-

ஒரு பப்பாளி பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இருக்கும் விதைகளை ஒரு கிண்ணத்தில் சேகரித்துக் கொள்ளவும்.

பிறகு இதை தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.இந்த பப்பாளி விதைகளை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அரைத்த பப்பாளி விதை பேஸ்ட் சேர்த்து கலந்து விடவும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து கலக்கி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.

Previous articleபிஸ்கட் என்றால் உயிரா? இது தெரிந்தால் இனி அதை தொடவே மாட்டீங்க!!
Next articleதமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம்!! பாயிண்டை பிடித்த விஜய்!!