தான்றிக்காய் இப்படி பயன்படுத்தினால்.. இனி கிட்டப் பார்வை தூரப் பார்வை குறைபாடே ஏற்படாது!!

Photo of author

By Gayathri

இன்று சிறு குழந்தைகள் கூட கிட்டப் பார்வை,தூரப் பார்வை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*தான்றிக்காய் – 1/4 Kg
*பொன்னாங்கண்ணி கீரை – ஒரு கட்டு

செய்முறை விளக்கம்:-

நாட்டு மருந்து கடையில் தான்றிக்காய் கிடைக்கும்.கால் கிலோ அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

பிறகு தான்றிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு அதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும்.பிறகு ஒரு கட்டு பொன்னாங்கண்ணி கீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் கொட்டி சுத்தம் செய்து கொள்ளவும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும்.பிறகு இதில் அரைத்த தான்றிக்காய் பொடியை சேர்த்து ஒருமுறை அரைக்கவும்.

பிறகு காட்டன் துணியில் இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக வைத்து வெயிலில் நன்கு காயவிடவும்.தான்றிக்காய் பொன்னாங்கண்ணி கலவை நன்கு காய்ந்ததும் அதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.பிறகு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.பிறகு அதில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் கிட்டப் பார்வை,தூரப் பார்வை பிரச்சனை சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – இரண்டு
2)கரு மிளகு – இரண்டு
3)உலர் திராட்சை – ஐந்து

செய்முறை விளக்கம்:-

உரலில் இரண்டு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு கரு மிளகு,ஐந்து உலர் திராட்சை சேர்த்து இடித்து சாப்பிட்டால் கிட்டப் பார்வை,தூரப் பார்வை பிரச்சனை சரியாகும்.