அடடே தூக்கி வீசும் வாழைப்பழத் தோலை இப்படி பயன்படுத்தினால்.. இத்தனை பலன்களை பெறலாமா!!

Photo of author

By Divya

உங்களில் பலர் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுவீர்கள்.இந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் தோலை தூக்கி எறிவது வழக்கம்.ஆனால் வாழைப்பழத்தை விட வேஸ்ட் என்று நினைத்து நாம் தூக்கி எறியும் வாழைப்பழத் தோலில் தான் ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கியிருக்கிறது.

வாழைப்பழத் தோலை வைத்து எந்தெந்த நோய் பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ளலாம் என்று கீழே விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

1.வாழைப்பழத் தோலை அரைத்து முகத்தில் பூசி குளித்தால் கரும்புள்ளிகள்,பருக்கள் அனைத்தும் மறைந்துவிடும்.

2.வாழைபழத் தோலை அரைத்து முள் குத்திய இடத்தில் பூசினால் முள் சீக்கிரம் வெளியேறிவிடும்.

3.கால் ஆணி வந்த இடத்தில் வாழைப்பழத் தோலை அரைத்து பூசினால் அவை ஓரிரு தினங்களில் குணமாகிவிடும்.

4.பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்க வாழைப்பழத் தோலை உலர்த்தி பொடித்து பற்கள் துலக்கினால் பலன் கிடைக்கும்.

5.வாழைப்பழத் தோலை காயவைத்து பொடித்து பாலில் கலந்து குடித்து வந்தால் இதய நோய் குணமாகும்.

6.மன அழுத்தம் இருப்பவர்கள் வாழைப்பழத் தோலில் தேநீர் செய்து பருகினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

7.தூக்கமின்மை பிரச்சனையால் ஆவதியடைந்து வருபவர்கள் வாழைப்பழத் தோலை பொடித்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

8.செரிமானப் பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் வாழைப்பழத் தோலை அரைத்து ஜூஸாக பருகலாம்.

9.மனநலப் பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் வாழைப்பழத் தோலை அரைத்து சாப்பிடலாம்.

10.நீரிழிவு நோய் பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் வாழைப்பழத் தோலில் டீ போட்டு பருகி பலனடையலாம்.

11.வாழைப்பழத் தோலை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

12.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத் தோலை ஜூஸாக பாருகினால் சில மணி நேரத்தில் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.