பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சாப்பிட வைக்க போராடுகின்றனர்.குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் அவர்களுக்கு களைத்துவிடுகிறது.ஸ்நாக்ஸ்,கடை உணவுகளை விரும்பி சாப்பிடும் குழந்தைகளை வீட்டு சாப்பாடு சாப்பிட வைப்பது சவாலான விஷயமாக இருக்கிறது.
ஜங்க் புட்,ஹோட்டல் உணவுகளைதான் குழந்தைகள் சாப்பிடுகிறர்கள் என்று பெற்றோரும் அதையே வாங்கி தருகின்றனர்.இது குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தை முழுமையாக பாழாக்கிவிடும்.குழந்தைகள் நீங்கள் செய்து கொடுக்கும் உணவை அடம் பிடிக்காமல் சாப்பிட சில ட்ரிக்ஸை பாலோ செய்ய வேண்டும்.
முதலில் குழந்தைகளுக்கு கடையில் இருந்து ஸ்னாக்ஸ்,புட்ஸ் வாங்கி தருவதை நிறுத்த வேண்டும்.வீட்டில் செய்யக் கூடிய உணவுகளின் நன்மைகள் பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டும்.
குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவுகளை தயாரித்து கொடுப்பதை நிறுத்திவிட்டு வித விதமான உணவு சமைக்க தொடங்குங்கள்.இட்லி,தோசை போன்றவற்றை வெரைட்டியாக செய்து கொடுங்கள்.
தோசையை அவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் உருவத்தில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.அதேபோல் இட்லி மீது கேரட்,பீட்ரூட் தூவி கொடுக்கலாம்.குழந்தைகளை கவர கேரட்,பீட்ரூட் இட்லி செய்து கொடுக்கலாம்.மினி இட்லி செய்து சாம்பாரில் ஊறவைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
குழந்தைகளுக்கு உணவின் அருமையை எடுத்து சொல்ல வேண்டும்.அவர்களை காய்கறி கடைக்கு கூட்டி அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை எடுத்து தர சொல்லவும்.இப்படி செய்தால் குழந்தைகளுக்கு காய்கறி உணவு மீது விருப்பம் ஏற்படும்.
குழந்தைகளுடன் சேர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டும்.குழந்தைகளுடன் பொறுமையாக பேசி சாப்பிட வையுங்கள்.கதைகள் சொல்லி சாப்பிட வையுங்கள்.குழந்தைக்கு உணவு கொடுக்கும் பொழுது டிவி,மொபைல் போன்றவற்றை பார்க்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.
உணவுகளை அழகாக டெக்ரேட் செய்து கொடுத்தால் அதை ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.குழந்தைகள் சாப்பிடும் பொழுது திட்டுவது,கண்டிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.குழந்தைகளுக்கு பசி இல்லாத பொழுது கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பால் மட்டும் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஹெல்த் மிக்ஸ்,முளைகட்டிய உணவு,வேக வைத்த வேர்க்கடலை,தாளித்த சுண்டல் போன்ற ஆரோக்கிய காலை உணவுகளை கொடுக்க வேண்டும்.காய்கறிகளை மசித்து கோதுமை மாவில் கலந்து சப்பாத்தி செய்து கொடுக்கலாம்.இப்படி அவர்களுக்கு பிடித்தபடி செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள்.