1 முறை இந்த பழத்தை பயன்படுத்தினால் போதும் பொடுகு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது

0
394
#image_title

 

1 முறை இந்த பழத்தை பயன்படுத்தினால் போதும் பொடுகு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

ஆண்கள், பெண்கள், சிறு வயதினர் என அனைவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனை தலையில் பொடுகு இருப்பது தான். இந்த பொடுகு தொல்லை நாளடைவில் நம் தலைக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த பொடுகு தொல்லையை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

பொடுகு ஏற்படுவதற்கான காரணங்கள்…

 

* இந்த பொடுகு பொதுவாக தலையில் எண்ணெய் சத்து இல்லாமல் தலை வறட்சியாக இருந்தால் பொடுகு ஏற்படும்.

 

* தலைக்கு குளிக்கும் பொழுது நாம் சோப்பு அல்லது ஷாம்பு பயன்படுத்துவோம். பிறகு நாம் தலையை சுமாராக கழுவி விட்டு வந்துவிடுவோம். நாம் தலையை சுத்தமாக கழுவாமல் விட்டுவிடுவதால் நம் தலையில் சோப்பு அல்லது ஷாம்பு சிறிதளவு இருக்கும். அதனால் கூட பொடுகு ஏற்படும்.

 

* தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தாலும் பொடுகு ஏற்படும்.

 

* தலையில் வியர்வை தங்கினாலும் பொடுகு ஏற்படும்.

 

* தலையில் இருக்கும் நுண் கிருமிகள் காரணமாகவும் பொடுகு ஏற்படும்.

 

* ஒருவரின் அருகில் நாம் இருக்கும் பொழுது அவர்களின் தலையில் பெடுகு இருந்து அவர்கள் தலையை எதாவது செய்தால் காற்று மூலமாகவும் பொடுகு நமக்கு ஏற்படும்.

 

* பொடுகு உள்ளவர்கள் பயன்படுத்தும் சீப்பு, துண்டு ஆகியவற்றை நாம் பயன்படுத்தினாலும் நமக்கு பொடுகு ஏற்படும்.

 

அதனால் தலைக்கு வராத்திற்கு இரண்டு முறை கட்டாயமாக குளித்துவிட வேண்டும்.

 

பொடுகு ஏற்பட்ட பிறகு அந்த இடம் அரிக்கத் தொடங்கும். அரிப்பு ஏற்படுவதால் நாம் சொறிந்து விடுவேம். பிறகு அந்த இடங்கள் சிவப்பு நிறமாக மாறும். இது தலைக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் பொடுகு வருவதற்கு முன்பு இந்த மருத்துவத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

 

இந்த பொடுகை நீக்க நாம் பயன்படுத்தப் போகும் அந்த மருந்து எலுமிச்சம் பழம் தான். எலுமிச்சம் பழத்தை வைத்து எவ்வாறு பொடுகை நீக்குவது என்று தெரிந்து கொள்ளலாம்.

 

பொடுகை நீக்க ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்துக் கொள்ளவும். அந்த எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து தலையில் மண்டை ஓடு பகுதி முழுவதுமாக தேய்த்து விடவேண்டும். பிறகு எலுமிச்சம் பழத்தின் தோலை எடுத்து தலை முழுவதும் தேய்த்து விட வேண்டும். பத்து நிமிடங்கள் தேய்த்து விட வேண்டும்.

 

அரை மணி நேரம் கழிந்து நாம் தலையை சுத்தம் செய்து கொள்ளலாம். சாதரணமாக நாம் பயன்டுத்தும் சீவக்காய் பொடி அல்லதா ஷாம்புவை பயன்படுத்தி நாம் தலையை சுத்தம் செய்து கொள்லாம். தலையில் பொடுகு போவதற்கு என்று பயன்படுத்தும் ஷாம்புவை இதற்கு பயன்படுத்தக் கூடாது.

 

பொடுகுத் தொல்லை குறைவாக இருப்பவர்கள் ஒரு முறை எலுமிச்சம் பழத்தை தலைக்கு பயன்ளடுத்தலாம். அதுவே தலையில் பொடுகு அதாகமாக உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரம் பயன்படுத்த வேண்டும்.

Previous articleஇனி ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த இந்த 1 இலை போதும்!!
Next articleகர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதனை 3 நாள் சாப்பிடுங்கள்!! 100% குழந்தை பேரு நிச்சயம்!!