இதை பயன்படுத்தினால் உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியாக வெளியே வந்துவிடும்!

Photo of author

By Kowsalya

இதை பயன்படுத்தினால் உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியாக வெளியே வந்துவிடும்!

உடலில் சளி எங்கிருந்தாலும் முழுமையாக மலம் வழியே வெளியே வந்துவிடும் மற்றும் இருமலும் சட்டென்று நின்றுவிடும்.

இந்த முறையை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். காலப்போக்கில் அதை நாம் மறந்துவிட்டோம்.

இப்பொழுது அது உங்களுக்காக

தேவையான பொருட்கள்:
1. இரண்டு வெற்றிலை
2. ஒரு கைப்பிடி துளசி
3. நான்கு கற்பூரவல்லி இலைகள்
4. மிளகு
5. மஞ்சள்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் முதலில் இரண்டு வெற்றிலைகளை கிழித்துப் போடவும். காம்புடன் போடவும்.
2. பிறகு ஒரு கைப்பிடி அளவு துளசி அதில் போடவும்.
3. என் நான்கே கற்பூரவள்ளி இலைகளை கழுவி விட்டு அதை கிழித்துப் போடவும்.
4. 5 மிளகை எடுத்து அதை இடித்து அதனுடன் சேர்க்கவும்.
5. கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை சேர்க்கவும்.
இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து நிறம் மாறிய உடன் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
சிறியவர்களாக இருந்தால் இளம் சூட்டில் கால் டம்ளர் மட்டும் கொடுக்கவும்.
மிகவும் வயதானவர்களாக இருந்தால் பாதி டம்ளர் குடிக்கலாம்.
மற்றவர்கள் ஒரு டம்ளர் வரை குடிக்கலாம்.
காலை மாலை குடித்துவர உங்கள் உடம்பில் சளி எங்கே இருந்தாலும் மலம் வழியே வெளியேறி விடும். தொடர்ந்து மூன்று நாட்கள் பருகி வந்தால் உங்களது சளி முற்றிலுமாக குறைந்து விடும்.

மேலும் வறட்டு இருமல் உள்ளவர்களுக்கு முக்கால் டீஸ்பூன் சுத்தமான தேனை எடுத்துக் கொண்டு அதில் 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூளை போட்டு அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வந்தால் வறட்டு இருமல் உடனடியாக குறையும். தேன் சாப்பிட்ட பின் பத்து நிமிடங்களுக்கு எதையும் சாப்பிடக் கூடாது.
இதை பயன்படுத்திப் பாருங்கள் உங்களுக்கு நல்ல பயனை தரும்.