அரசாங்கம் போட்ட ரோட்டில் அடிக்கடி நடந்தால் வாலிபர்கள் மீது அரிவாள் வெட்டு!!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!!
கோவையை சேர்ந்த ஆலந்துறை அடுத்த வெள்ளிமலை பட்டணம் பகுதில் வசித்து வருகிறார் கருப்பசாமி. இவரின் தந்தை தன்னாசி. இவர் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பாதையில் நடந்து செல்வது வழக்கம். மேலும் அந்தப் பகுதியில் குடியிருக்கும் கிட்டுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் உதயகுமார். இந்நிலையில் கருப்பசாமி வேலையை முடித்து விட்டு வீடு சொல்லும் போது அவரிடம் அந்தப் பகுதியில் குடியிருக்கும் கிட்டுச்சாமி என்பவர் எதற்காக அடிக்கடி இந்த வழியில் நடந்து செல்கிறாய் என கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் எற்பட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்து இருவரிடையே சில நாட்களாகவே வாக்குவாதம் ஏற்ப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வாக்குவாதத்தின் உச்சத்தில் கருப்பசாமி மற்றும் அவரது உறவினர் சுஜித்குமார் இருவரையும் உதயகுமார், மற்றும் அவரது நண்பர்கள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்புசாமியையும் சுஜித்குமாரை கத்தியால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதைக் கண்ட உதயகுமார் உள்ளிட்ட 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சேர்த்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கருப்புசாமியின் தந்தை தன்னாசி காவல்த்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கிட்டுசாமி மற்றும் சம்மந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.