பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா… அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

Photo of author

By Divya

பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா… அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

Divya

பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா… அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

தற்பொழுது அனைவருக்கும் பணத் தேவை இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பணம் இருந்தால் தான் வாழ்க்கையை நகர்த்த முடியும். இப்படி இருக்க இந்த பணத்தேவை விரைவில் பூர்த்தியாக நாம் எடுக்கும் முயற்சிகளோடு சில ஆன்மீக வழிகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

அந்தவகையில் பணத்தேவை பூர்த்தியாக கீழேகொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக வழியை பின்பற்றினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

உங்களுக்கு எந்த விதமானப் பணத் தேவைகள் இருந்தாலும் பௌர்ணமி அன்று உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள எதாவது சக்தி வாய்ந்த அம்மன் கோயிலுக்கு சென்று ஒரு முழம் பூ வாங்கி கொடுத்து உங்களுக்கு அந்த பணம் எதற்கு தேவைப்படுகிறது என்று சொல்லி எத்தனை நாட்களுக்குள் தேவைப்படுகிறது என்று சொல்லி மனதார வேண்டி ஒரு நெய் விளக்கு ஏற்றி விட்டு வரவும்.

அப்படி உங்கள் வேண்டுதல் நிறைவேறி விட்டால் கால் கிலோ குங்குமம், கால் கிலோ மஞ்சள் வாங்கிக் கோயிலுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி விளக்கு ஏற்றவும்.

முடிந்தவர்கள் சிறிய எலுமிச்சம் பழம் மாலை வாங்கி சாற்றவும். நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும். தேவைப்பட்ட பணம் கிடைக்கும்.