உங்கள் நகங்களில் இப்படி இருந்தால் உடம்பில் இந்த வியாதி உள்ளது உறுதி!! மக்களே செக் பண்ணிக்கோங்க!!
நம் உடலில் வேகமாக வளரக் கூடிய உறுப்புகளில் ஒன்று நகங்கள்.நகங்களை முறையாக வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.ஏனென்றால் பெரும்பாலான நோய்கள் நம் நகங்களின் வாயிலாக தான் உடலுக்குள் செல்கிறது.
அதேபோல் நம் நகத்தின் நிறம் மற்றும் அதன் மீது காணப்படும் சிறு மாற்றங்களை வைத்து உடல் ஆரோக்கியத்தின் நிலையை அறிந்து கொள்ள முடியும்.பொதுவாக உங்கள் நகம் வெள்ளையாக இருந்தால் உடலில் இரத்த உற்பத்தி குறைவாக இருக்கும் என்று சொல்வார்கள்.இது தவிர நகங்களில் வேறு என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தால் அவை ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் உங்கள் நகங்களின் விளிம்புகள் கருமை நிறத்தில் காணப்பட்டால் அவை கல்லீரல் நோய்க்கான அறிகுறிகளாகும்.அது மட்டுமின்றி மஞ்சள் காமாலை நோய் வருவதற்கான அறிகுறிகளாக இவை பார்க்கப்படுகிறது.
அதேபோல் நகங்களில் நடுவில் மட்டும் வெண்ணைமையாக காணப்பட்டால் அவை ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கான அறிகுறிகளாகும்.வெளிர் நிற நகங்கள் இதய செயலிழப்பு மற்றும் கல்லீரல் நோய்க்கான அறிகுறிகளாகும்.
நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அவை பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது.இந்நிற நகம் உள்ளவர்களுக்கு தைராய்டு,நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் நகம் நீல நிறத்தில் இருந்தால் அவை உடலில் போதிய ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்துகிறது.இவை நுரையீரல் பிரச்சனைக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.நகங்களில் மேடு பள்ளம் தென்பட்டால் அவை உங்களுக்கு கீழ்வாதம் ஏற்படுவதை காட்டுகிறது.
வளைந்த நகங்கள் இருந்தால் அவை இரும்புசத்து குறைபாட்டின் அறிகுறிகளாகும்.நகங்களில் செங்குத்தான கோடுகள் தென்பட்டால் அவை எடை இழப்பு,வயதாகுதல் உள்ளிட்டவை காட்டுகிறது.உங்கள் நகங்களை சுற்றி வீங்கி இருந்தால் அவை நகச்சுத்திக்கான அறிகுறிகளாகும்.
ஒருவேளை உங்கள் நங்கள் அடிக்கடி உடைந்து போனால் அவை ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறிகளாகும்.அதேபோல் உங்கள் நகம் பிளவுபட்டால் அவை தைராய்டு பாதிப்பிற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.ஆகவே உங்கள் நகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நல்லது.