உங்க டிக்கெட் இன்னும் கன்ஃபார்ம் ஆகலையா.. அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!!

Photo of author

By Gayathri

உங்க டிக்கெட் இன்னும் கன்ஃபார்ம் ஆகலையா.. அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!!

Gayathri

If your ticket is not confirmed yet.. then you definitely need to know this!!

ரயிலில் பயணம் செய்யக்கூடிய பல தங்களுடைய ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இதில் ஒரு சிலருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது கன்ஃபார்ம் செய்யப்பட்டு விடுகிறது. ஆனால் ஒரு சிலருக்கோ வெயிட்டிங் லிஸ்டில் டிக்கெட் ஆனது வைக்கப்படுகிறது.

இந்த வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் பலரும் தங்களுடைய ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் எந்தெந்த பெட்டியில் கன்ஃபர்மேஷன் இல்லாத டிக்கெட்டை பயன்படுத்துவதால் எவ்வளவு அபராதங்கள் போடப்படும் என்பதை இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.

காத்திருப்போர் பட்டியலில் இருக்கக்கூடியவர்களின் டிக்கெட்டுகளுக்காக புதிய விதிமுறைகளை ரயில்வே துறை ஆனது உருவாக்கியுள்ளது. இதன்படி ஸ்லீப்பர் கோச்சில் காத்திருப்பு பட்டியலில் இருக்கக்கூடியவர்கள் பயணித்தாலும் அல்லது வேறு ஏதும் கம்பார்ட்மெண்டில் பயணித்தாலும் அவர்கள் பயணிக்க கூடிய பெட்டிகளுக்கு ஏற்றவாறு அபராதங்கள் விதிக்கப்படும் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்திருப்போர் பட்டியலில் இருக்கக்கூடியவர்கள் பயணிக்கக்கூடிய பெட்டிகளும் அதற்குரிய அபராதங்களும் :-

✓ ஸ்லீப்பர் கோச் – ரூ.250 அபராதம் + பயணத்திற்கான செலவு

✓ AC கோச் – அதிகப்படியான அபராதம் + பயணத்திற்கான செலவுடன் ரூ.440 கூடுதல் கட்டணம் + எப்பொழுது வேண்டுமானாலும் இறக்கி விடுவதற்கான உரிமை

அபராதத்திலிருந்து தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் :-

ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால் முன்பதிவு செய்யப்பட்ட உங்களுடைய டிக்கெட் ஆனது காத்திருப்போர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுடைய டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறது என்றால் அந்த பயணத்தை உங்களால் தொடர முடியாது. அதையும் மீறி பயணிக்க நினைப்பவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும்.