உங்கள் TOOTH BRUSH இப்படி இருந்தால் யோசிக்காமல் தூக்கி வீசிடுங்க!! ஒரு டூத் பிரஸை எத்தனை நாள் பயன்படுத்தலாம் தெரியுமா?

Photo of author

By Rupa

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் பற்களை சுத்தமாக வைத்துள் கொள்ள டூத் பிரஸில் பல் துலக்குகின்றனர்.ஒவ்வொருவருக்கும் வாய் சுகாதாரம் என்பது மிக மிக அவசியமான ஒன்று.வாய்,பல்,ஈறு மற்றும் நாவை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமை.

சிறு வயதில் இருந்தே பற்களை ஆரோக்கியமாக பராமரித்து வந்தால் சொத்தைப்பல்,ஈறு வீக்கம்,வாய் துர்நாற்றம்,வாய்ப்புண் போன்ற எந்தஒரு பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்கும்.எனவே பற்களை சுத்தம் செய்ய சரியாக பிரஸ் தேர்வு செய்ய வேண்டியது முக்கியம்.

இன்று பலர் ஒரு பிரஸை 6 மாதங்கள் வரை பற்களை துலக்க பயன்படுத்தி வருகின்றனர்.இது மிகவும் மோசமான பழக்கமாகும்.ஒரு பிரஸை அதிகபட்சம் 2 முதல் 3 மாதங்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

ஆனால் சிலர் பிரஸ் முட்கள் வளைந்து போனாலும் அதை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பிரஸ் முட்கள் வளைந்து,தேய்ந்து போனால் அதை பற்கள் துலக்க பயன்படுத்தக் கூடாது.

நீண்ட நாட்களாக ஒரே பிரஸை பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் பற்களில் கிருமிகள் நீங்காமல் படிந்து நோய் அபாயத்தை ஏற்படுத்திவிடும்.

பிரஸ் முட்களை வளைத்தால் அவை வளைந்து மீண்டும் நேராக வேண்டும்.அப்படி இருந்தால் தான் அது பயன்படுத்த தகுதியானது.நீங்கள் முட்கள் தேய்ந்த பிரஸை பயன்படுத்தினால் பற்களில் அழுக்குகள் தேங்கி கறையாக மாறிவிடும்.இதனால் வாயில் துர்நாற்றம் ஏற்படும்.

நீங்கள் தேய்ந்து போன பிரஸை கொண்டு பற்களை துலக்கினால் பற்களின் வலிமை குறைந்துவிடும்.எனவே இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை புது டூத் பிரஸ் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.முட்கள் தேய்ந்த,வளைந்த பிரஸை பயன்படுத்தினால் பல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.