மலிவான விலையில் 20 நிமிடத்தில் கொரோனா கண்டறியும் கிட் – ஐஐடி சாதனை

Photo of author

By Parthipan K

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகானதில் பரவ துவங்கிய கொரோனா நோய்த் தொற்று, உலகையே பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கமான கொரோனாவுக்காக எடுக்கப்படும் பரிசோதனை முடிவு வர சில மணி நேரங்கள் ஆகும் என்பதால், பரிசோதனையைத் துரிதப்படுத்தும் பொருட்டு சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட்கிட்களை இறக்குமதி செய்திருந்தது இந்தியா. ஆனால் அதில் வெளியான முடிவுகள் முரனாக இருந்ததால், ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. மேலும் அந்த டெஸ்ட் கிட்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் இணைந்து IGG Elisa டெஸ்ட் கருவியை கண்டுபிடித்ததா என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐஐடி ஐதராபாதை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 20 நிமிடங்களில் கொரோனா நோய்த் தொற்றை கண்டறியும் சோதனை கருவியை கண்டுபித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது பின்பற்றப்பட்டு வரும் RTPCR முறையில் இல்லாமல், அதற்கு மாற்று முறை இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். தற்போது 550 ரூபாய்க்கு உருவாக்க்படும் இந்த கருவியை பெரிய அளவில் உறபத்தி செய்தால் 350 ரூபாய்க்கே தர முடியும் என தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனை கருவியை அரசி பரிசோதனை செய்து ஒப்புதல் அளித்தவுடன் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.