பணமழை பொழிய வைப்பேன்! 52 இலட்சம் மோசடி!

0
58
I'll make it rain money! 52 lakh fraud!
I'll make it rain money! 52 lakh fraud!

பணமழை பொழிய வைப்பேன்! 52 இலட்சம் மோசடி!

எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றலாம் என்றே சிலர் இரவு பகலாக யோசிப்பார்கள் போல. ஒரு புலம்பலாக யாரிடமாவது நம் கஷ்டத்தை சொல்கிறேன் என்று நினைப்பவரை ஆறுதல் என்ற பெயரில் தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தலாம் என்றுதான் அனைவரும் நினைக்கின்றனர். ஆறுதலாக யாரும் இல்லை.

புனே சிங்காட் பகுதியை சேர்ந்த வியாபாரி தொழில் நஷ்டம் அடைந்த நிலையில் அவருக்கு ஜல்னாவை சேர்ந்த கிஷன் ஆசாராம் பவார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் சில பூஜைகளை செய்து பணமழை வரவழைப்பதாக தெரிவித்தார்.

இதற்காக வியாபாரிடம் இருந்து ரூ.52 லட்சத்தை கிஷன் ஆசாராம் பவார் பெற்று கொண்டார். ஆனால் அவர் கூறியபடி எதுவும் நடக்கவில்லை.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வியாபாரி சம்பவம் குறித்து புனே போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இநத புகாரின் படி புனே போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், அந்த ஆசாமி ஜல்னாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதன்படி புனே மற்றும் ஜல்னாவில் உள்ள மாந்தா போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஜல்னாவில் உள்ள ஹைவர்கேடாவில் கிஷன் ஆசாராம் பவார் இருப்பதாக தெரியவந்தது.

மேலும் வியபாரியின் புகாரை உறுதிபடுத்த போலி வாடிக்கையாளர் ஒருவரை அனுப்பி விசாரித்தனர். அங்கு அவர் போலி வாக்குறுதி அளித்து பணமழை வரவழைப்பதாக கூறி மோசடி செய்து வந்தது உறுதியானது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கிஷன் ஆசாராம் பவாரை பிடித்து கைது செய்தனர்.