நான் ஒன்னும் டீஸன்ட் பாலிடிஷியன் இல்லை.. வேட்டியை மடிச்சு கட்டினா நானும் லோக்கல் தான் – அன்புமணியின் ஆவேச பேச்சு வைரல்!!
என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்து நிலமெடுக்கும் பணி வேகமாக நடை பெற்று வருவதை யொட்டி இதனை கண்டித்து பாமக தலைவர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற பொழுது இவர் பேச்சுக்கள் என்றும் இல்லாத அளவிற்கு ஆவேசமாக இருந்தது தற்பொழுது வைரலாகி வருகிறது.
அவ்வாறு இவர் பேசியதாவது, என்எல்சியின் மூன்றாவது சுரங்கம் என ஆரம்பித்து பெரியப்பட்டு சைமா சாயக்கழிவு ஆலை வரை கடலூர் மாவட்டத்தையே நாசம் செய்யும் பல திட்டங்களை கொண்டுவரும் நிலையில் அதனை முறியடிப்போம் என்று கூற்றினார்.
மேலும் அன்புமணி டீசன்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ்னு நினைச்சுட்டு இருக்காங்க ஆனா நான் அப்படி இல்லை நானும் வேட்டிய மடிச்சு கட்டினால் தான் தெரியும் நான் யாருன்னு என்று காட்டமாக பேசியது தற்பொழுது அரசியல் சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் ஆவேசமாக பேசியது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவர், இவ்வாறு மூன்றாவது சுரங்கத்திற்காக மணலை எடுக்கிறார்கள் என்று சென்னையில் இருக்கும் எனக்கே கோபம் வருகிறது, உங்களுக்கு எல்லாம் எப்பயா கோபம் வரும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கடலூர் மக்கள் எப்பையா கோபப்பட போகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
தனியார் நிறுவனம் இங்கு உள்ள மண்ணை அழித்து தண்ணீரை உறிஞ்சி முற்றிலும் பாலைவனமாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து நடந்து வந்தால் அனைத்து மாவட்டமும் ஒரேடியாக அழிந்து விடும். எனக்கென்ன எங்கேயோ நடக்கிறது என்று அனைவரும் வேடிக்கை மட்டும் தான் பார்க்கின்றனர். அந்த வகையில் யார் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி நான் ஒரு பிடி மண்ணை கூட தனியாரை எடுக்க விடமாட்டேன்.
பாமக அன்புமணின்னு சொன்னாவே டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ்னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா நான் அப்படி இல்லை ஏன்னா இது என்னுடைய மக்களின் பிரச்சனை, விவசாயிகளின் பிரச்சனை இதனை ஒருபோதும் சும்மா விடமாட்டேன் என கூறினார்.
இவ்வாறு பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று அதனை வெளிப்படுத்தும் விதமாக அவர் அணிந்திருந்த வேட்டியை மடித்து கட்டி பேசிக்கொண்டிருக்கும் இடத்தை விட்டு இரண்டு அடி தள்ளி வந்து மக்களை நோக்கி பார்த்தார், இதனை கண்டவுடன் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாகினர்.
இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் அவர் கையில் மம்பட்டி ஒன்றை கொடுத்தனர். அதனை அன்புமணி ஏந்திய படி, இதுதான் எங்கள் ஆயுதம் என கோஷமிட்டார். மேலும் இந்த பொதுக்கூட்டம் நிறைவு பெறும் பொழுது அங்குள்ள நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு வீரவாளை பரிசாக அளித்ததற்கு இனி வீரவாளையெல்லாம் கொடுக்காதீர்கள் அதற்கு மாறாக மண்வெட்டியை கையில் கொடுங்கள் என கூறினார்.