கொட்டி தீர்க்க போகும் மழை! இந்த மாநிலங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்!

0
106

இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு சில பகுதிகள் பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளை தவிர அனைத்துப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியுள்ளது.

கொங்கண் மற்றும் கோவா ஆகிய பகுதிகளுக்கும் ரெட்அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது.

மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சில பகுதிகள், கர்நாடகா, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இன்று வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள கடலோர பகுதிகளுக்கு ஜூன் 17 வரை ஆரஞ்சு எச்சரிக்கையை கொடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் பெங்களூரில் உள்ள யூனிட் டைரக்டர் சிஎஸ் பட்டேல் கூறியுள்ளார்.

ANI அறிவுரையின்படி கர்நாடக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 13 முதல் 17 வரை கர்நாடக மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உத்தர கன்னடா, உடுப்பி, தக்ஷின் கண்ணட, சிவமோக, சிக்மங்களூர் ஆகிய இடங்களில் அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை ஜூன் 13 முதல் 17 வரை அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பெங்களூரில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று பாட்டீல் தெரிவித்தார்.

உத்திரப்பிரதேசத்தில் சில பகுதிகள் பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் சில பகுதிகள் தவிர 10 நாட்களுக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பருவமழை பெய்ய உள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மத்திய பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் கிழக்கு உத்திரப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள், முழு உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கிட், பல்திஸ்தான், முசாபராபாத், ஹரியாணா, சண்டீகர், வடக்கு பஞ்சாப் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழைக்காலத்தின் வடக்கு எல்லை (என்.எல்.எம்) டியு, சூரத், நந்தூர்பார், போபால், நோவ்காங், ஹமீர்பூர், பராபங்கி, பரேலி, சஹரன்பூர், அம்பாலா மற்றும் அமிர்தசரஸ் வழியாக செல்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை மத்திய பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், கிழக்கு உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாபின் இன்னும் சில பகுதிகளிலும் முன்னேற நிலைமைகள் சாதகமாக உள்ளன, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Previous articleநீங்கள் மட்டும் தான் செய்வீர்களா? நானும் தான் செய்வேன்! முன்னாள் ராணுவ வீரர் செய்த செயல்!
Next articleகன்னியாகுமரிக்கு கடத்தி சென்ற போது பிடிபட்ட பொருள்! வனத்துறையினர் செய்த செயல்!