உடனே சொத்தை பற்களில் உள்ள எல்லா பூச்சிகளும் வெளியில் வந்து சரியாகிவிடும்! 

Photo of author

By Kowsalya

உடனே சொத்தை பற்களில் உள்ள எல்லா பூச்சிகளும் வெளியில் வந்து சரியாகிவிடும்!

பல் வலியை சொல்லியெல்லாம் புரிய வைக்கமுடியாது. அதை அனுபவித்தவர்களுக்கு தான் அதன் உபாதை புரியும். அழகான புன்னகை வேண்டும் என ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. அதேபோல் ஆரோக்கியமாக பற்களை வைத்துக் கொள்ளவும் தெரிய வேண்டும். பல் வலியால் சிரிக்க கூட முடியவில்லையே என கவலைப்படுபவர்களுக்கு தான் இந்த இயற்கையான முறை.

தேவையான பொருட்கள்:

1. கண்டங்கத்திரி விதைகள் ஒரு ஸ்பூன்

2. வேப்ப எண்ணெய் 2 ஸ்பூன்

3. தேங்காய் ஓடு ( கொட்டாங்குச்சி (மூன்று கண்களையும் ஓட்டை போட்டுக் கொள்ளவும்))

4. அருவாள் 1

செய்முறை:

1. கண்டங்கத்திரி அனைவருக்கும் தெரிந்தது. அதை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைத்து விடவும். நன்கு காய்ந்ததும் அதை இடித்து அதனுடைய விதைகளை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

2. இப்பொழுது ஒரு அரிவாள் எடுத்துக்கொள்ளவும். வேறு இரும்பு சம்பந்தமான எந்தப் பொருள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

3. அந்த அருவாளை நன்கு அடுப்பில் வைத்து சூடேற்றி கொள்ளவும்.

4. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அரை அளவு சாதாரணமான தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அதன் மேல் சூடான அரிவாளை வைக்கவும்.

5. இப்பொழுது அதன் மேல் கண்டங்கத்திரி விதைகளை போடவும். அதன்மேல் வேப்ப எண்ணையை ஊற்றவும்.

6. புகை வர ஆரம்பிக்கும் பொழுது கொட்டாங்குச்சி அதாவது தேங்காய் ஓட்டை போட்டு மூடிக் கொள்ளவும்.(கொட்டாங்குச்சியில் மூன்று கண்களையும் ஓட்டை போட்டுக் கொள்ளவும்.).

7. புகை வரும் பொழுது நமது வாயை திறந்து அந்த மூன்று ஓட்டைகளையும் அடைக்குமாறு வைத்துக் கொள்ளவும்.

8. 5 நிமிடம் அப்படியே வைத்துக் கொள்ளவும்.

9. புகையை வெளியே விடாமல் வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது நன்கு உமிழ் நீர் சுரக்கும். உமிழ்நீரை கொட்டாங்குச்சியில் உள்ள ஓட்டை மூலமாக வெளிவிடவும். அது நாம் கீழே வைத்திருக்கும் தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் கொட்டி விடும்.

10. 5 நிமிடம் கழித்து அந்தப் பாத்திரத்தை பார்க்கும் பொழுது உங்கள் பற்களில் உள்ள சொத்தைகளில் இருந்து புழுக்கள் மற்றும் பூச்சிகள் அந்த பாத்திரத்தில் விழுந்து இருக்கும்.

இது முற்றிலும் உண்மை. நீங்கள் பயன்படுத்தி பயன்பெறுங்கள் .