நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவாசப்பயிற்சி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!!
நாம் தினமும் யோகாசனம் செய்ய வேண்டும். அது மிகவும் முக்கியமான ஒன்று. உடற்பயிற்சி சொய்ய முடியாதவர்கள் அனைவரும் யோகா பயிற்சிகளை செய்யலாம். அதிலும் சுவாசப் பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஒருவர் தினமும் மூச்சு பயிற்சி அல்லது சுவாசப் பயிற்சி செய்வதன் மூலம் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. சுவாசப் பயிற்சியை தினமும் செய்து வந்தால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமடைகின்றது.
சுவாசப் பயிற்சி செய்வதில் ஆழமான மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். ஆழமான சுவாசப் பயிற்சி செய்வதன்.மூலமாக என்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
ஆழமான சுவாசப் பயிற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்…
* ஆழமான சுவாசப் பயிற்சி செய்வதன் மூலம் உடல் முழுவதும் உடல் முழுவதும் புத்துணர்சியை பெறலாம்.
* தொடர்ந்து ஆழமான சுவாசப் பயிற்சியை செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை நாம் பெறலாம்.
* தூக்கமின்மை காரணமாக அவதிப்படும் அனைவரும் தொடர்ந்து ஆழமான சுவாசப் பயிற்சியை செய்து வருவதன் மூலமாக எளிமையாக தூங்கலாம்.
* ஆழமான சுவாசப் பயிற்சி செய்வதன் மூலமாக மன அழுத்தத்திற்கா காரணமாக இருக்கும் கார்டிசோல் ஹார்மோனை குறைக்கலாம்.
* தினமும் ஆழமான மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலமாக இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.
* தினமும் தொடர்ந்து ஆழமான சுவாசப் பயிற்சியை செய்வதன் மூலமாக இரத்தத்தின் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜன் அளவை கண்டறிந்து சுவாச விகிதத்தை தேவைக்கு ஏற்ப சரிசெய்யும்.
* தினமும் ஆழமான சுவாசப் பயிற்சி செய்யும் பொழுது இதயத்துடிப்பு கட்டுப்படுகின்றது.