IOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
211
#image_title

IOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB), காலியாக உள்ள Faculty, Office Assistant, Attender உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நிறுவனம்: Indian Overseas Bank (IOB)

பதவி:

1.Faculty – 01

2.Office Assistant – 03

3.Attender – 01

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 05

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate Degree, Post Graduate Degree, MSW, MA, B.Sc, BA, B.Ed, 10 அம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: Faculty, Office Assistant, Attender பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8,000/- முதல் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: Faculty, Office Assistant, Attender பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Faculty, Office Assistant, Attender பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.iob.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நாளிலிருந்து அடுத்த 15 தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

Previous articleஉங்கள் நட்சத்திரம் இதுவா? 27 நட்சத்திரத்திற்கு உரிய தொழில் துறை!!
Next articleதெரிந்து கொள்ளுங்கள்.. பூரான் கடி நிமிடத்தில் குணமாக இயற்கை மருந்து வகைகள்!!