10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொதுத்தேர்வு குறித்து முக்கிய தகவல்!

0
243
Important announcement for 10th and 12th class students! Important information about general examination!
Important announcement for 10th and 12th class students! Important information about general examination!

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொதுத்தேர்வு குறித்து முக்கிய தகவல்!

நம் தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது ஏப்ரல் ஆறாம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவே 12 ஆம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்குகிறது.

அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் 20-ம் தேதி குள்ளயே முடிவடைகிறது. அந்த வகையில் தற்பொழுது கேரளாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச் 9ஆம் தேதி தொடங்குகிறது.

பின்பு மார்ச் 29ஆம் தேதி உடன் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நிறைவடைகிறது. இதற்கு முன்பாகவே மாதிரி தேர்வுகள் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் பத்தாம் தேதி வெளியிட உள்ளனர்.

இதேபோல பன்னிரண்டாம் வகுப்பு தேர்வானது மார்ச் மாதம் பத்தாம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து வரும் முப்பதாம் தேதி உடன் முடிவடைய உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வானது பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. அத்தோடு தேர்வு முடிவுகள் 12 ஆம் வகுப்பிற்கு மே 25ஆம் தேதி வெளியிட உள்ளனர்.இதுகுறித்த அறிவிப்பை கேரளா பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

Previous articleமாணவர்களுக்கு 1 ரூபாய் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
Next articleஇவர்களுக்கு வீட்டுமனை உதவித்தொகை 2000 என அடுத்தடுத்த சலுகைகள்! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!