செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்!

0
257

செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்!

கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று குறைய தொடங்கியது. ஆனால் இப்போதுதமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதனால் தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது.

 

மேலும் இதனையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள தகவலில்மருத்துவ துறையில் உள்ள செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்றும் அத்துடன் 4,308 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Previous articleபல வருடங்களுக்கு பிறகு இணைந்த வடிவேலு- பிரபுதேவா… டான்ஸ் vibe-க்கு தயாரா?
Next articleஇலங்கையில் அதிபர் குடும்பத்தோடு தப்பிச் சென்ற  காரணம் என்ன?