வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த மாவட்டங்களில் தொடரும் கனமழை!!

0
206
Important announcement issued by Meteorological Department!!
Important announcement issued by Meteorological Department!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த மாவட்டங்களில் தொடரும் கனமழை!!

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கோடை வெயில் அனைவரையும் வாட்டிய நிலையில் தற்போது மழை பெய்வது அனைத்து இடங்களிலும் குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முக்கியமாக சென்னை மற்றும் அதற்கு அருகே உள்ள மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.

இந்த கனமழை பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் இடி மின்னலுடன் பெய்தது.
சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது. சென்னையில் 2 நாட்களாக மழை கொட்டி தீர்த்த பின்னர் தற்போது வெயிலானது கண்களுக்கு தென்படுகிறது.

நள்ளிரவு வரை மழை பெய்து விட்டு அதன் பிறகு காலையில் சூரிய வெளிச்சம் வந்துவிட்டது. வங்கக்கடலில் உள்ள தென்கிழக்கு கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஓரிரு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனையடுத்து, சென்னையை தவிர்த்து 10 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

அந்த வகையில் நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் சென்னையில் உள்ள தரமணி ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஒவ்வொன்றிலும் தலா 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

மேலும் ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம், மின்னல், சென்னை அயனாவரம் மற்றும் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

Previous articleதிருமணத்திற்கு அடுத்தநாளே மணப்பெண் உயிரிழப்பு!! உடல் நலக்குறைவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
Next articleகரோனா பரவல் குறித்து முக்கிய தகவல்!! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!