மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இனி ஓய்வூதிய தொகை 2 மடங்கு!!
அரசு சார்பாக பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் பொதுமக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இனி இரண்டு மடங்காக ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கின்றது.
பொதுவாக நீண்ட காலமாக மாநில அரசு தரப்பில் இருந்து வருமானத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் சாமானிய மக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த ஓய்வுதிய தொகை மாதத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இவ்வறு வழங்கும் பட்சத்தில் இதனை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகை குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அனைத்து மக்களும் பெற முடியாது.
வயதான மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை பெண்கள் மட்டுமே உயர்த்தப்பட்ட இந்த ஓய்வூதிய தொகையை பெற முடியும் என்று உத்திரபிரதேசம் அரசு தெரிவித்துள்ளது.
இனி இவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய தொகையில் ரூ.500 முதல் ரூ.1000 வரை அதிகமாக கிடைக்கும். இந்த ஓய்வூதிய தொகையை பெற விரும்பினால் அதற்கான தகுதி சான்றுதல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் விதவை பெண்ணிற்கான ஓய்வூதிய தொகை பெற விரும்பினால் அதற்கான விதவை சான்றுதல் அவசியம். அதிலும் விண்ணப்பித்த பெண் தன் கணவன் இழந்த பிறகு இரண்டாவது திருமணம் எதாவது செய்திருந்தால் அவருக்கு இந்த தொகை வழங்கப்படாது.
மேலும் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு இருக்கும் குழந்தைகள் பெரியவர்களாக இருக்க கூடாது. இது போன்ற அனைத்து அறிவிப்பிற்கும் தகுதி உடையவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.