பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு! சென்னை சென்ட்ரலில் இருந்து முன்பதிவு இல்லா  சிறப்பு ரயில்! 

0
169
#image_title

பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு! சென்னை சென்ட்ரலில் இருந்து முன்பதிவில்லா  சிறப்பு ரயில்! 

தெற்கு ரயில்வே பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட இருக்கிறது. இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்திற்கு சிறப்பு ரயில் இன்று (ஜூன் 23ஆம்) தேதி இயக்கப்பட இருக்கிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜூன் 23ஆம் தேதி அதாவது இன்று வெள்ளிக்கிழமை  இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜூன் 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஜார்கண்ட் மாநிலத்தின் தான்பாத் நகரை சென்றடையும். இந்த ரயிலில் 22 பொதுப்பெட்டிகள் உள்ளன. மேலும் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய தேவையில்லை. இது முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஆகும்.

மேலும் இந்த ரயில் குறித்த கூடுதல் விவரங்கள் இன்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்படும். என தெற்கு ரயில்வேயின் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Previous articleபால் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்வு.. அதிர்ச்சியடையும் பாமர மக்கள்!!
Next articleமுன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!