பால் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்வு.. அதிர்ச்சியடையும் பாமர மக்கள்!!

0
105
#image_title

பால் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்வு.. அதிர்ச்சியடையும் பாமர மக்கள்!!

பாலின் கொள்முதல் விலையானது அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்த நிலையில் பால் விற்பனை விலையும் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆவின் பாலின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் புதுச்சேரியிலும் இது செயல்பாட்டுக்கு வந்தது. தற்பொழுது தான் கர்நாடகா தேர்தல் நடைபெற்ற முடிந்தது மேற்கொண்டு பெண்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டைப் போலவே அவர்களும் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி விட்டு அதனைத் தொடர்ந்து பால் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது கர்நாடகாவில் நந்தினி பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனின் விலையை உயர்த்தப் போவதாக கூறுகின்றனர். நம் மாநில பால் சங்கத்தினர் ஒரு லிட்டருக்கு ஐந்து ரூபாய் வரை பாலின் விலையை உயர்த்த வேண்டும் என்றும் ஒரு பக்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கையை அம்மாநில அரசு பரிந்துரை செய்து செயல்படுத்தினால் பாமர மக்கள் பெருமளவில் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறுகின்றனர். அரசின் நடவடிக்கை என்னவென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.