ஆதார் புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பு!! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியீடு!!

Photo of author

By Gayathri

ஆதார் புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பு!! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியீடு!!

Gayathri

கோடை விடுமுறை காலங்களில் பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க தவறிய மாணவர்கள் புதுப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

 

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்திருப்பதாவது :-

 

தமிழகத்தில் மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற திட்டத்தின் கீழ் 2024 2025 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இதில் 5 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்றது என்றும் தெரிவித்திருக்கிறார்.

 

கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல் முறை செய்யாமல் இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக இந்த கோடை விடுமுறை நாட்களை பயன்படுத்தி அதனை முடித்து விடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் முடிக்காத மாணவர்கள் அருகில் இருக்கக்கூடிய இ சேவை மையங்கள் அஞ்சலகங்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கு நேரில் சென்று அங்கு நடைபெறக்கூடிய சிறப்பு முகாம் கல்லில் ஆதார் பயோமெட்ரிக்கை புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

 

மேலும் பள்ளியில் நடைபெறக்கூடிய சேர்க்கையின் பொழுது மாணவர்களிடம் ஆதார் பயோமெட்ரிக் கால பணிகள் நிறைவு செய்து வரும்படி கூற வேண்டும் என்றும் அவ்வாறு செய்வதன் மூலம் வங்கி கணக்குகள் தொடங்குதல் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற முக்கிய பணிகள் எளிமையான முறையில் மற்றும் வேகமாக நடைபெற உதவிகரமாக இருக்கும் என்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.