அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி?
அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சி. உமாராணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் தற்போது தொடங்கியுள்ள அண்ணா பல்கலைக்கழகில் வழங்கப்படும் பி ஹெச் டி, எம் எஸ் மற்றும் ஒருங்கிணைந்த எம் எஸ், பி ஹெச் டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படிப்புகளில் சேர விரும்பும் பட்டதாரிகள் இணையதளம் வழியாக இம்மாதம் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் விண்ணப்ப நகலை பிரிதியை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அறிவித்துள்ளது. மேலும் முதுகலை படிப்பை முடித்தவர்கள் மற்றும் முதுநிலை படிப்பின் இறுதியாண்டு பருவத் தேர்வு எழுதி முடிப்பிற்காக காத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த படிப்புகளுக்காக வெளிநாட்டில் உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் அண்ணா ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பொதுப்பிரவினர்க்கு 1180 எஸ்டி,எஸ்சி பிரிவினர்க்கு 708 செலுத்த வேண்டும் இதில் பிஹெச்டி, எம் எஸ் படிப்புகளை முழு நேரமாகவோ அல்லதுபகுதி நேரமாகவோ தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப படித்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களை பெறுவதற்கு வலைதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.