’மறக்குமா நெஞ்சம்’… வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் சிங்கிள்!

0
297

’மறக்குமா நெஞ்சம்’… வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் சிங்கிள்!

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிம்பு, ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.செப்டம்பர் 15 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிம்பு குரலில் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்ற நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் குரலில் தாமரை வரிகளில் உருவாகியுள்ள “மறக்குமா நெஞ்சம்” என்ற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ முன்பே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று வெளியான இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் சிம்பு. அடுத்து படத்தின் ஆடியோ மற்றும் டிரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அமெரிக்காவில் இருப்பதால் இசை வெளியீடு அவர் இந்தியா திரும்பியதும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்கும் என சொல்லபடுகிறது.

Previous articleபுஜாராவா இது…? 20 பவுண்டரிகள், 6 சிக்ஸரோடு அதிரடி சதம் விளாசி அசத்தல்
Next articleஅண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here