மகிழ்ச்சி நாளை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை! உயர் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் m-tech எம். ஆர்க், எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர தமிழ்நாடு நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

இந்த வருடத்திற்கான எம்பிஏ எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான இந்த தகுதித் தேர்வு மே மாதம் 14ஆம் தேதியும், எம்.இ, எம்டெக், எம். ஆர்க், முதுநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே மாதம் 15ஆம் தேதியும், நடைபெறவிருக்கின்றன.

இந்த தேர்வுகளை எழுதுவதற்கான விண்ணப்ப பதிவு சமீபத்தில் தொடங்கியது. தேர்வுக்கு மொத்தம் 36,710 பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.

தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மே மாதம் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனை அண்ணா பல்கலைக்கழகத்தின் tanset/index.html என்ற இணையதளப் பக்கத்தில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.