கர்ப்பிணி பெண்கள் அனைவரும் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்!

Photo of author

By Gayathri

கர்ப்பிணி பெண்கள் அனைவரும் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்!

திருமணமான பெண்கள் கருதரித்ததும் எதை செய்ய வேண்டும்,செய்ய கூடாது என்பது போல எதை சாப்பிட வேண்டும்,சாப்பிட கூடாது என ஒரு லிஸ்ட் போட்டு விடுவார்கள்.அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் சாப்பிட கூடிய உணவாக ராகி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட சத்தான உணவு ராகி. இதன் பெயர் கேப்பை என்றும் சொல்வார்கள்.

ராகியில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

குழந்தை உடல் எடைக்கு உதவும் உணவு. இதில் கால்சியம், இரும்புசத்து, நார்சத்து உள்ளது உடலுக்கு உறுதியாளிக்ககூடியது.

மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு. சர்க்கரை அளவு அதிகமகாமல் இருக்க உதவும்.

கொழுப்பை குறைக்கும் நல்ல கொழுப்பை தக்கவைத்துக்கொள்ளும்.

உடலுக்கு குளிர்ச்சியானது. ரத்தசோகை வராமல் தடுக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். எலும்பும் உடம்பும் நன்கு வலுப்பெரும்.

தைராய்டு நோயாளிகளுக்கு மிகச்சிறந்தது. மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகசிறந்த உணவு. வயிற்றில் உள்ள குழந்தைக்கு நல்ல வளர்ச்சி கொடுக்க கூடியது ராகி.

பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்பாலுக்கு பிறகு சாப்பிட தர தகுந்த உணவாக ராகி கருதபடுகிறது.