பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்!

0
194

பீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்!

விஜய் நடிப்பில் உருவாகி விரைவில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் இந்த படத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து விஜய் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. அதனை தொடர்ந்து, பிப்ரவரி 14 அன்று படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த பாடல் யூட்யூப்பில் தற்போது நம்பர் ஒன் ட்ரெண்டிங் பாடலாக உள்ளது.

படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதால், டீசர் தயாரிக்கும் வேலையும் தற்போது முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த மாதத்தின் இறுதியில் அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் பீஸ்ட் படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleகூலித்தொளிலாளியின் மகன்கள் பரிதாபமாக கிணற்றில் மூழ்கி சாவு!
Next articleவானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here