வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

0
231

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள கடலோர பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (பிப்ரவரி 21) தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதனை தொடர்ந்து, நாளைய தினம் (பிப்ரவரி 22) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (பிப்ரவரி 23) தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 24) தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 25) தென் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். இதில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

Previous articleபீஸ்ட் படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல்!
Next articleஇவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here