காலை சிற்றுண்டி குறித்து முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்!
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அன்று தமிழகத்தில் மாநகராட்சி ,நகராட்சி ,ஊரகம் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் ரூ 33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.அப்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தனர்.மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறிய முதல்வர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
அதனையடுத்து தற்போது பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இரண்டு பள்ளிகள் ,நான்கு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை மு.க ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார்.ரூ3.7கோடி மதிப்பில் 4,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.