பெரும்பான்மையான மக்கள் சேவிங் சக்கவுண்ட் மற்றும் கரன் பாலன்ஸ் அக்கவுண்ட் ஆகிய இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்தி வரும் நிலையில், ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பது இன்றளவும் ஒரு சிலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. ஜாயிண்ட் அக்கவுண்ட் குறித்து முழுமையான விவரங்களை இந்த பதிவில் காண்போம்.
ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பது ஒன்றாக சேர்ந்து தொழில் புரிவோருக்கு அல்லது ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இதில் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு தனி அக்கவுண்ட்டை பயன்படுத்துவதற்கு வங்கி அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாயிண்ட் அக்கௌன்ட் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் :-
✓ இரண்டு நபர்களில் யார் வேண்டுமானாலும் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தலாம். ஒருவர் இறந்துவிடும் பட்சத்தில் மற்றொருவர் தொடர்ந்து அக்கவுண்டை பயன்படுத்தலாம்.
✓ ஏதேனும் டிரான்ஸாக்ஷன்களை செய்ய அனைத்து அக்கவுண்ட் ஹோல்டர்களின் கையெழுத்தும் அவசியம்.
✓ முதல் அக்கவுண்ட் ஹோல்டர் மட்டுமே வாழ்நாள் முழுவதும் அக்கவுண்ட்டை இயக்க முடியும். அவருடைய இறப்புக்கு பிறகு இரண்டாவது நபர் அக்கவுண்டை இயக்கலாம் என்ற ஆப்ஷனையும் பயன்படுத்தலாம்.
✓ இரண்டாவது அக்கவுண்ட் ஹோல்டரால் மட்டுமே அக்கவுண்டை இயக்க முடியும். அவருடைய இறப்பிற்கு பிறகு முதல் நபர் அக்கவுண்ட்டை இயக்கலாம் என்ற ஆப்ஷனையும் பயன்படுத்தலாம்.
குறிப்பாக, அனைத்து அக்கவுண்ட் ஹோல்டர்களும் செல்லுபடியாகும் அடையாள மற்றும் முகவரி சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஆதார் அட்டை, PAN கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அட்டை போன்றவை அடையாள அட்டைகளாக பயன்படுத்தப்படும்.
அதே நேரத்தில் மின்சார ரசீது, கேஸ் பில் அல்லது வாடகை ஒப்பந்த பத்திரங்கள் முகவரி சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும்.கூடுதல் பாதுகாப்புக்கு ஜாயிண்ட் அக்கவுண்டுக்கு நாமினி ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம்.