மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு குறித்து முக்கிய தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு!!
நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் பல எதிர்ப்புகள் இருந்து தான் வருகிறது. இருப்பினும் ஆண்டுதோறும் தவறாமல் அத்தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகளும் வெளிவந்தது. வழக்கம் போல இந்த முறையும் பல உயிரிழப்புகளை சந்திக்க நேரிட்டது.நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர் மற்றும் மாணவிகள் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறினர்.
அந்தவகையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவானது தொடங்கியது.அரசு அளித்த இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். சில காரணங்களால் மாணவர்கள் பலரால் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியவில்லை. அந்த மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை கால அவகாசம் கொடுத்து நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அக்டோபர் மூன்றாம் தேதி முடிவடைய இருந்த ஆன்லைன் விண்ணப்பம் பதிவானது அக்டோபர் ஆறாம் தேதி வரை நீடித்தனர். அந்த வகையில் இன்று மாலை 5 மணியுடன் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைய உள்ளது.